தமிழ் திரையுலகில் ஒரே மாதிரியான கதைகள் அல்லது கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் முன்பும் வந்துள்ளன. ஆனால் தற்போது திரையுலகில் எதிர்பாராத விதமாக ஒரு புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. ஒரே நேரத்தில் ஆறு திரைப்படங்கள் கடலோரப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் கதைக்களம் துறைமுகங்களைச் சுற்றிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல், கார்த்தி நடிக்கும், தமிழரசன் இயக்கும் படம் கடலோர மக்களின் வாழ்கை மற்றும் பிரச்சனைகளை பேசும் கதையாக உருவாகி வருகிறது.
விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜ் காமராஜ் கூட்டணியில் உருவாகும் மற்றொரு படமும் கடலோரக் கதையை கொண்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சிவகார்த்திகேயன் நடிக்கும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘மதராஸி’ திரைப்படமும் துறைமுகங்களில் நடக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டதாம்.
மேலும், சூரி நடிக்கும் மண்டாடி (இயக்கம்: மணிமாறன்) படம் கடலில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இறுதியாக, அஜித் நடிக்கும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமும் கடலோர பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை மையமாகக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆறு படங்களும் ஒரே மாதிரியாகக் கடல், துறைமுகம் மற்றும் கடலோர மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் பிரச்சனைகளை கொண்டு உருவாகி வருவதால், ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் இவை அனைத்தும் ஒரே கதையா அல்லது வெவ்வேறு நெகிழ்வுகளைக் கொண்டவையா என்பதிலான எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது.