புதுமுகம் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘கட்ஸ்’. ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜோஸ் ஃபிராங்க் இசையமைத்துள்ளார்.
இதனை ஓபிஆர்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரிக்கிறார். இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகரும், இயக்குனருமான ரங்கராஜ், “25 வருடங்களாக நடிகனாக வர முடியாமல் தவித்து வருகிறேன்.

ஒரு படத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி விலக முடிவு செய்தேன். அப்போது நண்பர்கள் குறும்படங்கள் இயக்கிக்கொண்டிருந்தார்கள். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் என்று சொன்னார்கள். இது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. பிறகு நானே தயாரிக்க ஆரம்பித்தேன். இன்று நான் ஒரு நடிகனாக மாறிவிட்டேன், இந்த படத்திற்காக நான் நிறைய உழைத்தேன். தியேட்டர்களில் டிக்கெட் விலையை குறைத்தால் சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெறும்,” என்றார்.