சென்னை: பிரபல காமெடியன் ரோபோ சங்கர் மறைவால் ரசிகர்கள், திரைத்துறை மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அரசியல் கட்சி வேறுபாடு இல்லாமல் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இறுதி ஊர்வலத்தின் போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடி அவருக்கு வழி அனுப்பிய காட்சிகள் இணையத்தில் பரவியது.

இணையத்தில் இந்த நடனம் தொடர்பாக பலர் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். சிலர் பிரியங்காவை “குடிகாரன் இறந்தது மகிழ்ச்சியோடு கொண்டாடும் போல் ஆடுகிறாள்” என விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர் தமிழ் பாரம்பரியத்தை மீறியது என்று கூறி முறைசெய்துள்ளனர். சிலர், கணவன் இறந்த போது கவலை இல்லாதபடி நடனமாடியதாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
.ஆண் நடனம் செய்யும்போது சமூகக் கேள்விகள் எழுப்பப்படவில்லை, ஆனால் பெண் நடனம் செய்தால் கலாச்சாரம் மற்றும் பண்பாடு எனக் குற்றாரோபணம் செய்யப்படுகிறது. இது பெண்களை எப்போதும் ஆண்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இறுதி ஊர்வலத்தில் நடனமாடுவது மகிழ்ச்சி வெளிப்பாடல்ல, அது துக்கத்தினை பிரதிபலிக்கும் விதமாக இருக்கலாம். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா நடனம் செய்தது அந்த உணர்வின் வெளிப்பாடு. அனைவரும் இதை தெளிவாக புரிந்து, விமர்சனங்களை விடுவதை கற்றுக் கொள்ள வேண்டும்.