பிரபல நடிகர் ரியாஸ் கானின் மகனும் வளர்ந்து வரும் நடிகருமான ஷாரிக் ஹாசன் தனது காதலியான மரியா ஜெனிஃபரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடைபெற்று, மிகவும் கோலாகலமாக ரசிகர்களிடையே பேசப்பட்டது.

மரியா ஜெனிஃபர், ஷாரிக் ஹாசனை விட வயதில் பெரியவராகவும், ஏற்கனவே திருமணமானவராகவும், அவருக்கு ஒரு மகளும் இருப்பதாகும் தகவல்கள் திருமணத்தின் போது வைரலானன. ஆனால், இருவரும் பல ஆண்டுகளாக உறவில் இருந்து முடிவாக திருமணத்தில் இணைந்தனர். அவர்களின் காதலும் திருமணமும் ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது.
திருமண நிச்சயதார்த்தம் முதல் வளைகாப்பு வரை நிகழ்ச்சிகளில் மரியாவின் மகளும் பங்கேற்றது அனைவரையும் ஈர்த்தது. வளைகாப்பும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. பின்னர் தம்பதியர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததும், ரசிகர்கள் மத்தியில் இனிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போது, ஜூன் 28ஆம் தேதி ஷாரிக் மற்றும் மரியா தம்பதியர் ஆண் குழந்தையை பெற்றுள்ளனர். இந்த தகவலை ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவுடன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது புதுமுக மகனை நெஞ்சோடு அணைத்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. மரியா, குழந்தையின் காலில் முத்தமிடும் காட்சியும் இருக்கிறது.
இந்த வீடியோவுடன், “எனது வாழ்க்கையின் சிறந்தவளுக்கு சிறந்த பரிசை தர விரும்பினேன். அதனாலோ என்னவோ என்னைப் போல ஒருவனை அவளுக்குக் கொடுத்துள்ளேன். ஜூன் 28 அன்று நாங்கள் எங்களின் ஆண் குழந்தையை வரவேற்றோம்” என அவர் எழுதியுள்ளார்.
இச்செய்தி வெளிவந்ததிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். “வாரிசு வந்தாச்சு” என நெட்டிசன்கள் மகிழ்ச்சியுடன் பதிவு செய்து வருகின்றனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.