சென்னை: கடந்த டிசம்பர் மாதம், ரங்கா இயக்கத்தில் மற்றும் நிதின் மெஹ்தா, இளங்கோ குமனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த “தென் சென்னை” திரைப்படம் வெளியானது. இந்த படம் ஒரு புதுமையான ஆக்சன் திரில்லராக, அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இயக்குனர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு, கதையின் நாயகனாகவும், பாடலாசிரியராகவும் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
இந்த படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியான நிதின் மெஹ்தா, இளங்கோ குமனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான பின்னணி இசையை ஜென் மார்ட்டின் அமைத்துள்ளார்.
“தென் சென்னை” படத்தை குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியிட்ட பிறகு, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு மற்றும் படக்குழுவின் முயற்சிகளுக்கு பெரும் பாராட்டுக்கள் வந்துள்ளன. தற்போது, இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரங்கா கதாநாயகனாக “ரங்கா – ஜேசன்” என நடித்துள்ளார், மேலும், கதாநாயகி ரியா “மேகா”, இளங்கோ குமனன் “டோனி”, சுமா “மரியா”, தாரணி “தாரா”, நிதின் மேஹ்தா “ருத்ரா” என்ற வில்லனாக, திலீபன் “சிவக்குமார்” என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவாளர் எம். சரத்குமார் மற்றும் எடிட்டிங் தொகுப்பாளராக இளங்கோவன் தங்களின் சிறப்பான பணியினை செய்து படம் மற்றும் அதன் காட்சிகள் மிக அழகாக வெளிப்படுகின்றன. படத்தில் ஜென் மார்ட்டின் இசையும், பாடல்கள் மற்றும் பின்னணி இசையுடன் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
“தென் சென்னை” படத்தின் ஒட்டம் புறப்படும்போது, இதன் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தது, ஏனெனில் இது ஒரு புதிய முயற்சியாக திகழ்ந்தது.