இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா காதலர் தின சிறப்பு வீடியோ ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பம் நாளை அவரது ‘ஸ்ரீகாந்த் தேவா அஃபிஷியல்’ என்ற யூடியூப் சேனலில் வெளியாகிறது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், “சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது. தொடர்ந்து இசையமைத்து வருகிறேன். பின்னணி இசை அமைக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.
இதற்கிடையில் காதலர் தினத்திற்காக பட்டாக்கத்தி கண்ணால’ என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கான பாடலை காதல் மதி எழுதியுள்ளார். அஷ்வின் விஷால் இயக்கியுள்ளார். இதில் காதலர்களாக சஞ்சுவும், சனமும் நடித்துள்ளனர். இனிமேல் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆல்பம் பாடலை வெளியிடுவேன். ஆல்பம் பாடல்களில் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியும். இப்போது இசையமைப்பாளர்கள் கச்சேரிகளில் கவனம் செலுத்தச் சொல்கிறார்கள். விரைவில் கச்சேரிகளை நடத்த உள்ளேன்” என்றார்.