சென்னை: தென்னிந்திய சினிமாவில் மட்டுமில்லாமல், பாலிவுட்டிலும் ஸ்ரீலீலா பிரபலமாகி வருகிறார். தற்போது அவர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதல்படம் வெளியாவதற்கு முன்பே அடுத்த படம் கிடைத்துள்ளது.
தனது முதல் பாலிவுட் படம் வெளியாவதற்கு முன்பே, ஒரு பெரிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. பாபி தியோல் மற்றும் ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தில் ஸ்ரீலீலா முன்னணி நடிகையாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.விரைவில், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலீலா பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார்.
இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பவன் கல்யாணுடன் ”உஸ்தாத் பகத் சிங்”, ரவி தேஜாவுடன் ”மாஸ் ஜதாரா” மற்றும் தமிழில் ”பராசக்தி” ஆகிய படங்களிலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.