டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் இந்தியாவின் முன்னணி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இணைந்து உருவாக்கும் “SSMB 29” படம், இந்திய சினிமாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத் உட்பட பல நாடுகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘பாகுபலி’ மற்றும் ‘RRR’ மூலம் உலகளவில் வெற்றி பெற்ற ராஜமௌலி, இந்த படத்தின் மூலமும் தெலுங்கு சினிமாவின் சக்தியை மீண்டும் நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்திற்காக 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, உலகம் முழுவதும் 120 நாடுகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உலக பாக்ஸ் ஆபிஸில் ₹10,000 கோடி வசூல் பெறும் இலக்கை ராஜமௌலி நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்கா, கென்யா போன்ற நாடுகளில் சாகச மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத் புறநகர் பகுதியில் ஒரு ஸ்டைலான பாடல் எடுக்கப்பட்டு, அது உலகளவில் ஹைதராபாத் பெயரை உயர்த்தும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்வதேச நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சில ஹாலிவுட் நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இந்த படத்திற்கு இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் மகேஷ் பாபு சிங்கங்களுடன் நடமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
“Gen43” எனும் தலைப்பில் வெளியாகவுள்ள இந்த படம், உலக அரங்கில் இந்திய சினிமாவுக்கு புதிய அலை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே நடந்த மூன்று கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ‘SSMB 29’ படம் வெளிவரும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.