தமிழ் திரையுலகில் பன்முக கலைஞராக வலம் வரும் ராஜ்கிரண், தனது மாமியாருக்கு கோவில் கட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான ராஜ்கிரண், பின்னர் கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் வெள்ளி விழாவும் கண்டது.
இப்படத்திற்காக ராஜ்கிரண் தமிழக அரசின் விருதையும் பெற்றார். முதல் படமே மாஸ் ஹிட் ஆனதால் கோலிவுட்டில் பிரபலம் அடைந்தார் ராஜ்கிரண். பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்து அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களை இயக்கியது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்தார்.
ராஜ்கிரண் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றதால் குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி கண்டார். இதன் காரணமாக, ரஜினி, கமலுக்கு முன்பே ரூ.1 கோடி சம்பளம் வாங்கி, கோலிவுட்டில் அதிக டிமாண்ட் உள்ள நடிகராக வலம் வந்தார் ராஜ்கிரண். ராஜ்கிரணின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், ஜோதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் . இவருக்கு நயினார் முகமது, ஜீனத் பிரியா என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று ராஜ்கிரண் வீட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ராஜ்கிரணின் மனைவி அவருடைய பிரமாண்டமான வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார். குறிப்பாக ராஜ்கிரணின் பங்களாவை சுற்றிலும் மரங்கள். இயற்கையை அதிகம் நேசிப்பதாகவும், மரங்களோடு பேசுவதாகவும் ராஜ்கிரண் மனைவி கூறுகிறார். அதுமட்டுமின்றி அவரது வீட்டிற்குள்ளும் ஒரு கோவிலும் உள்ளது.
ராஜ்கிரண் தன் மாமியாருக்காக கட்டிய கோவில் அது. 100 வயதைத் தாண்டிய ராஜ்கிரணின் மாமியார் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவர். ராஜ்கிரண் வழிபடுவதற்காக வீட்டிற்குள் அந்த அழகிய கோவிலைக் கட்டியுள்ளார். அந்த கோவிலில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களின் கடவுள்களும் வழிபட்டுள்ளனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் மாமியார் மீது அம்புட்டு பாசமா என கேட்டு வருகின்றனர்.