சுதா கொங்கரா ஹிந்தியில் சூரரைப் போற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் வெளியீடு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.
படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “படத்திற்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. என்னால் முடிந்ததை கொடுக்க கடினமாக உழைக்கிறேன். இந்தப் படம் நம் மனதிற்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கும் என அறிவித்தனர். இதனால் படம் ட்ராப் ஆகிவிட்டதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. கதை தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கதையை அறிந்த தனுஷ் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. தனது அடுத்த படம் புறநானூறு படம்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் அவர் தனுஷுக்கு ஏற்ப காட்சிகளை மாற்றி சுதா கொங்கரா படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.