சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டின் முதல் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு கலகலப்பு மூன்றாம் பாகத்தை சுந்தர் சி எடுக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரண்மனை 4 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி ஒரு சிறிய படத்தைத் தயாரிக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் அதனால் கலகலப்பு 3 படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் சுந்தர் சியின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் அவருக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்து தற்போது படப்பிடிப்பு எளிதாக துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.