படப்பிடிப்பிற்கு இடையே பழைய நினைவுகளை வீடியோ பதிவு மூலம் பகிர்ந்து கொண்டார் நடிகர் சூரி. திருச்சியில் ‘மாமன்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சூரி. மார்ச் மாதம் படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார் சூரி.
அப்போது எதிரே உள்ள சுவரில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தனர். சூரி வீடியோ எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” சூரி நடிகராவதற்கு முன்பு பல்வேறு வேலைகளில் பணியாற்றியவர். அப்போது வெள்ளையடிக்கும் வேலையைப் பார்த்ததை இந்தப் பதிவின் மூலம் நினைவு கூர்ந்தார். ‘மாமன்’ படத்தை முடித்த பிறகு, எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தில் கவனம் செலுத்துகிறார் சூரி. இதனை ‘செல்ஃபி’ இயக்குனர் மதிமாறன் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.