கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் சமீபத்திய படமான ‘சூர்யா 44’ தற்போது படப்பிடிப்பு முடிந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படம் 2025 ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக சூர்யா 44 படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நாயகியாக திரிஷா நடிக்கிறார். சமீபத்தில், சூர்யா 45 படக்குழுவுடன் த்ரிஷா திரையுலகில் 22 ஆண்டுகளைக் கொண்டாடினார். அந்த வீடியோவில், சூர்யா சால்ட் & பெப்பர் தோற்றத்தில் தோன்றினார், இது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்த உடையில் சூர்யா மிக நேர்த்தியான ஸ்டைலில் தோன்றினார், மேலும் அவர் அணிந்திருந்த வளையலும் அந்த தோற்றத்தின் ஸ்டைலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வழக்கமாக, சூர்யா தனது படங்களில் தனது ஸ்டைலான தோற்றத்தை வெளிப்படுத்துவார், ஆனால் இப்போது இந்த புதிய தோற்றத்துடன், அவரது புதிய படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சூர்யா 45 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது, மேலும் இது ஒரு மாஸ் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.