சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ரோலக்ஸ் வேடத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து தனி படம் எடுக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார். தற்போது ‘ரோலக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பின் போது என்ன நடந்தது என்று சூர்யா கூறியுள்ளார்.
அதில், “அன்று காலையிலும் காட்சி பற்றிய பேப்பர் வரவில்லை. நான் கெட்டவன் என்று எனக்குத் தெரியும். கமல், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் படத்தின் கடைசி 2 நிமிடங்களில் நான் இருப்பேன் என்று எனக்குத் தெரியும். நாங்கள் ஷூட் செய்தோம். அரை நாள் மட்டுமே. கேமராக்களை எல்லாம் வைத்த பின் இதையெல்லாம் செய்யப் போகிறோம் என்றார்கள்.
ஷூட்டிங்குக்கு முன்னாடியே எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. 20 வருடங்களாக நான் திரையில் புகை பிடிக்கவில்லை. அதைச் செய்யக்கூடாது என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருந்தேன். இப்போது நான் கெட்டவன், ஏன் சூர்யாவை இதற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். அந்தக் காட்சிக்கு முன், நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.
கமல்ஹாசனும் படப்பிடிப்புக்கு வருவார் என்றார்கள். அதனால் அவர் வருவதற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் அவர் முன் என்னால் நடிக்க முடியாது. 3 மணிக்கு வருவார் என்றார்கள். நான் ஒரு மணிக்கு தயாராகிவிட்டேன்,” என்றார்.