சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் இன்று திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கங்குவா’ 3டி படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பீனிக்ஸ் வீழான்’ திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 14-ம் தேதி வெளியாகாது.
சென்சார் போர்டு பரிந்துரைத்த கட்டுப்பாடுகளால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஆதரவு, புரிதல் மற்றும் பொறுமைக்கு ரசிகர்களுக்கு நன்றி. ‘பீனிக்ஸ் வீழான்’ முன்னெப்போதையும் விட வலுவாக வெளிவருகிறது. அது நிகழும்போது, அது மற்றொரு மட்டத்தில் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.