ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய படத்தைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் சூர்யா கவனம் செலுத்துவார். இது சூர்யா நடிக்கும் 46-வது படமாகும். ஹைதராபாத்தில் பூஜையுடன் இதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை இயக்குனர் திரிவிக்ரம் தொடங்கி வைத்தார். வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா தண்டன், மமிதா பைஜு மற்றும் பலர் வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நிமிஷ் ரவி ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், பங்கலான் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், நவீன் நூலி எடிட்டராகவும் இருப்பார்கள். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.