சூர்யாவின் இந்திப் படம் பற்றி பல மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதைப் பற்றி சூர்யா எந்த பேட்டியிலும் பேசவில்லை. நேற்று மும்பையில் ‘கங்குவா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய ‘கர்ணா’ படம் குறித்து சூர்யாவிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சூர்யா, “இருவரும் சந்தித்துப் பேசியது உண்மைதான். இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம். இது நிறைய நேரம் எடுக்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தளத்துக்குச் செல்வோம் என்று நம்புகிறோம்” என்று பதிலளித்தார்.
இந்த பதிலின் மூலம் சூர்யா-ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இணைந்து பணியாற்றுவது நிஜமாகியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.