‘பிரேமலு’ படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு. ஜி.வி.க்கு ஜோடியாக நடித்தார். தமிழில் ‘ரெபல்’ படத்தில் நடித்தார். அடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘இரண்டு வானம்’ படத்தில் நடித்தார். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ‘இட்லிக் கடை’. ‘குபேர’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மான்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‘போர் தொழில்’ இயக்குனர் விக்னேஷ்ராஜா படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.