தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா – ஜோதிகாவும் ஒருவர். 2006-ல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மும்பையில் செட்டிலாகிவிட்டாலும் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரித்து வருகிறார்.
2டியில் தயாரிப்பாளரின் பெயருக்கு முன்னால் ஜோதிகாவின் பெயரையும், பின்னர் தனது பெயரையும் போட்டு தனது காதலை வெளிப்படுத்தியவர் சூர்யா. தற்போது ‘கங்குவா’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்துள்ள பேட்டியில் ஜோதிகாவுடனான காதல் குறித்து பேசியுள்ளார்.
ஜோதிகாவுடனான காதல் பற்றி சூர்யா கூறும்போது, “ஜோதிகா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது 18-வது வயதில் ஹிந்தி படத்தில் நடித்துவிட்டு சென்னைக்கு வந்தார். தமிழில் கதாநாயகியாக முதல் படத்திலேயே என்னுடன் நடித்தார். பிறகு 6 படங்களில் ஒன்றாக நடித்தோம். நண்பர்களாகிய நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் செய்யும் வேலையை மதித்தோம்.
அதனால் காதல் பிறந்தது. இருவரும் காதலை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மைதான். ஒருவர் இல்லாமல் ஒருவர் இருக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.