சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1ம் தேதி வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை கடந்துவிட்டது. இந்த வெற்றியின் பின்னணியில் சூர்யா தனது லாபத்தில் இருந்து ரூ. 10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இப்போது அவர் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ‘796CC’ என அழைக்கப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு ரூ. 60 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பளத்தை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.வெங்கி அட்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் பலரின் பாராட்டை பெற்றது. அதன் வெற்றிக்கு பிறகு, சூர்யாவுடன் கூட்டணியாக அவர் உருவாக்கும் படம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய படம் ரூ. 300 கோடி முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகவிருக்கிறது.இப்படம் இன்னும் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.
ஆனால், இதன் ஓடிடி உரிமம் ஏற்கனவே ரூ. 85 கோடிக்கு விற்றுவிட்டது. சூர்யாவின் ரெட்ரோ வெற்றிக்கு பிறகு, வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் வெற்றியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இயக்குநர் அவரையே தேர்வு செய்திருக்கிறாராம்.முன்னதாக, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
இப்போது மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.சூர்யா வழங்கிய தானம், பட விற்பனை விவரங்கள், புதிய படத்திற்கான சம்பள விவரங்கள் என அவர் சுற்றியுள்ள செய்திகள் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், அது 2025-ஆம் ஆண்டின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தி சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களிடையிலும் பெரும் பேச்சுக்குரியதாக மாறியுள்ளது.மேலும் இந்த கூட்டணி திரையுலகில் புதிய சாதனைகளை உருவாக்குமா என்பதைக் காண வேண்டும்.