சென்னை : தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘விடி12’ படத்தின் தமிழ் டப்பிங் டீசர் பணியை சூர்யா நிறைவு செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவின் 12வது திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் நாளை(பிப்.12) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ் டப்பிங் டீசருக்கு குரல் கொடுக்கும் பணியை நிறைவு செய்துள்ளார் நடிகர் சூர்யா.