தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய கருப்பு திரைப்படம் தள்ளிப்போயுள்ளது. இதற்கான காரணத்தை இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி சமீபத்திய பேட்டியில் விளக்கியுள்ளார்.
“படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. ஆனால் சில முக்கியமான CG (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) வேலைகள் நிறைவடையவில்லை. அதனால் தான் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆனால் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும் நானும் படத்தை பார்த்து மிகுந்த திருப்தியில் இருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தீபாவளி சிறப்பு தினத்தில் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் எனவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சிறிது ஆறுதல் அடைந்துள்ளனர். படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் வாய்ப்பு அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா ரசிகர்கள் இதனை பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகிறார்கள். ஆறு, வேல், சிங்கம் போன்ற கமர்ஷியல் ஹிட்ஸ் பட்டியலில் கருப்புவும் இடம் பெறும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.