சூர்யா தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தன்னுடைய சினிமா தேர்வுகளினாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ரெட்ரோ” படத்தை முடித்ததன் பின்னர், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் “கருப்பு” என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சூர்யா 45’ என்ற கோட்பேப்பாக இருந்த இந்தப் படம், ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக ‘கருப்பு’ என டைட்டில் அறிவிக்கப்பட்டது. இப்படம் ஆன்மீக நம்பிக்கைகளை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது என்றும், சூர்யா இரண்டு முக்கியமான வேடங்களில் – ஒரு வக்கீலும், மற்றொன்று அய்யனாராகவும் – நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தனது 50வது பிறந்த நாளை ஜூலை 23ஆம் தேதி கொண்டாட உள்ளார். அதே நாளில் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
‘கருப்பு’ ஒரு பேமிலி எமோஷனல் டிராமா படம் என்று கூறப்படுகிறது. இதில் சூர்யாவுடன் திரிஷா, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, யோகி பாபு, இந்திரன்ஸ், சுப்ரீத் ரெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சூர்யாவை மாஸ் ஹீரோவாக காட்டும் இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது ‘சூர்யா 46’ என அழைக்கப்படுகிறது. ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கியின் இந்த புதிய முயற்சி, குடும்ப ஆடியன்சுக்கு ஏற்ற ஒரு உணர்ச்சி மிக்க படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், ‘சூர்யா 46’ திரைப்படத்தில், சஞ்சய் ராமசாமி (கஜினி) போன்று ஒரு ஆழமான பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகை மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சூர்யா தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் தேர்வு செய்து நடிப்பதால், ரசிகர்களிடம் அவருக்கு உள்ள நிலைமேலும் உயர்ந்து வருகிறது. ‘கருப்பு’ படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் படங்களான ‘பைசன்’, ‘டூட்’, ‘இராமாயணம்’ ஆகியவற்றுடன் போட்டியிடும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.