சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘மாமன்’ படம் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள படம்.
இதில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ்நாட்டில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

குடும்ப உறவுகளைப் பற்றி பேசும் இந்தப் படம் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் விரைவில் Zee5 தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.