பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென் தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்துள்ளார். ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு பாடியுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், அவர் தனது இளமை பருவத்தில் சல்மான் கானை காதலித்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “சல்மான் கானின் முதல் படம் வெளியான தருணத்தில் நான் அவரை காதலித்தேன்.
அவருடைய சுவரொட்டிகளை வாங்குவதற்காக எனது வீட்டு உதவித் தொகையை செலவு செய்தேன். அப்போது, வீட்டுப் பாடத்தை சரியான நேரத்தில் முடிக்கவில்லை என்றால், எனது அறையிலிருந்து சுவரொட்டிகளை அகற்றி விடுவோம் என மிரட்டினர்.
சுவரொட்டிகளைச் சேமிக்க நான் அதை சரியான நேரத்தில் முடித்துவிடுவேன். அந்த நேரத்தில் நான் அவரை காதலித்தேன். பின்னர் நாங்கள் நண்பர்களான பிறகு அவரிடம் இந்தக் கதையைச் சொன்னேன். சல்மான் கானும் சுஷ்மிதா சென்னும் ‘பிவி நம்பர் 1’, ‘மைன் நே பியார் கியூன் கியா’ உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.