‘கருடன்’ படத்திற்கு பிறகு சூரி ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சியில் தொடங்கியுள்ளது. இதில் சூரியின் தங்கையாக முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்வாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது மகனுக்கும் சூரிக்கும் இடையே நடக்கும் காதல் சண்டைதான் படத்தின் கதை.
எனவே படத்திற்கு ‘மாமன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தையும் ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தையும் பிப்ரவரிக்குள் திருச்சியில் ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘மாமன்’ படத்தை முடித்த சூரி, ‘செல்ஃபி’ இயக்குனர் மதிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.