சென்னை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த படங்களை தொடர்ந்து தற்போது புரி ஜெகன்நாத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தபு.
‘இருவர்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘சிநேகிதியே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.