நடிகர் விஜய் சேதுபதி அடுத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பூரி ஜெகநாத் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. விஜய் சேதுபதி இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் இந்தி நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.