சென்னை: கமல்ஹாசன் நடித்த மற்றும் தயாரித்துள்ள தக் லைஃப் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரது கருத்துக்கள் காரணமாக கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழிலிருந்து கன்னடம் உருவானது என அவர் இசை வெளியீட்டு விழாவில் கூறியதிலிருந்து சர்ச்சை தொடங்கியது. கன்னட அமைப்புகள் அவரது உருவப் பொம்மைகளை எரித்தும், போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், கர்நாடகா ஃபிலிம் சாம்பர்ஸ் நிறுவனம், கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் படம் வெளியிட அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கமல் படம் கர்நாடகாவில் வெளியாவதில்லை என்றால், கன்னட நடிகர்களின் படங்களும் தமிழ்நாட்டில் வெளியாகக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். இப்படியான சூழ்நிலையில், ‘தக் லைஃப்’ கர்நாடகாவில் வெளியாவாத பட்சத்தில் ஏற்படக்கூடிய நஷ்டம் என்ன என்பதை சினிமா வட்டாரங்கள் ஆராய்ந்துள்ளன.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ‘விக்ரம்’ திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் 26.25 கோடி வசூல் செய்தது. ‘இந்தியன் 2’ படம் 7.5 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் 20 முதல் 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை படம் வெளியாவாமலிருந்தால், 20 கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், ரசிகர்கள் தமிழ்நாட்டில் வந்து படம் பார்ப்பார்கள் என்பதால், பெரிய பாதிப்பு இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மணிரத்னம் இயக்கும் இந்த படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பாலிவுட் நடிகை சான்யா மல்கோத்ரா நடித்துள்ள இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் ரீல்ஸ்களில் வைரலாகியுள்ளது.
படத்தின் முதல் நாள் இந்தியா முழுவதிலும் 35-40 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 60-70 கோடி வரை வசூலிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் வெற்றியை விமர்சனங்களின் தன்மை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்துக்கான பாக்ஸ் ஆபீஸ் கணிப்புகள் SACNILK, Ramesh Bala, Taran Adarsh போன்ற புகழ்பெற்ற தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும், சரியான விவரங்களைப் பெற மேற்கண்ட தளங்களை பார்வையிடலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.