பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் ‘தமிழன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், ராஜமௌலி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
‘இந்தியானா ஜோன்ஸ்’ படத்தைப் போல இதுவும் உலகளாவிய ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என்று ராஜமௌலி கூறியிருந்தார். மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் அனுமனை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆப்பிரிக்கக் காடுகளில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமும், பிருத்விராஜும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னதாக தகவல் வெளியானது.
தற்போது இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உலகளாவிய படம் என்பதால் ஹாலிவுட்டில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைப்பது படத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவும் என படக்குழு கருதுவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.