விஜய் சேதுபதியை சிவா இயக்கும் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு சிவா என்ன இயக்குவார் என்பது தெரியவில்லை. இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. சிவா தற்போது விஜய் சேதுபதியைச் சந்தித்து ஒரு கதையைச் சொல்லியுள்ளார்.
சிவா அடுத்ததாக இந்தப் படத்தை இயக்குவார் என்றும், அதற்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதியிடம் தனது இறுதித் திரைக்கதையைச் சொன்னவுடன் படம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று தெரிகிறது.

படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட எந்த விவரங்களும் இறுதி செய்யப்படவில்லை. ‘அண்ணாத்த’ மற்றும் ‘கங்குவா’ படங்களின் தோல்வி காரணமாக சிவா தனது அடுத்த படத்திற்குத் தயாராக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு சிவா அஜித்தின் படத்தை இயக்கவிருந்தார்.
ஆனால், அந்தப் படத்தின் தோல்வியால், அஜித்-சிவா கூட்டணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித்-சிவா கூட்டணி ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.