பாலிவுட்டில் அறிமுகமானதும், தென்னிந்திய சினிமாவில் பான் இந்தியா நடிகையாக பரிணமித்ததும் தமன்னா பாட்டியா. ‘மில்கி பியூட்டி’ என அழைக்கப்படும் இவர், தனது ஆரம்ப காலத்தில் கடும் சிரமங்களை சந்தித்ததாகவும், சில முன்னணி நடிகர்கள் தவறாக நடந்துகொண்ட அனுபவமும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமன்னா ஒரு தென்னிந்திய மொழி படத்தில் நடித்தபோது, அந்த படத்தின் முன்னணி நடிகர் ஒருவர் தனது கரவானுக்குள் வந்து தவறாக நடந்து கொண்டதாகவும், இது மிகுந்த மனவேதனை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். நடிகரின் செயல் எல்லையை கடந்ததாகவே இருந்ததால், தமன்னா நேரடியாக எதிர்த்து, இப்படி நடந்தால் படத்தில் நடிக்க முடியாது எனத் தெரிவித்ததாகவும் கூறினார்.

இதற்குப் பிறகு, அந்த நடிகர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால், படப்பிடிப்பை தொடர்ந்ததாகவும் தமன்னா கூறுகிறார். இத்தகைய பல கசப்பான அனுபவங்களை தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் சந்தித்ததாகவும், தான் இன்றைய நிலையை அடைய மிகுந்த உழைப்பும், மன தைரியமும் தேவைப்பட்டதாகத் தமன்னா நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
இவ்வளவு பிரபலமான நடிகையாக இருந்தாலும், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், தொழிலில் நிலவும் சூழ்நிலைகள் பற்றியும் தமன்னா திறந்த மனதுடன் பேசியுள்ள இந்த தகவல்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகர் யார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ள நிலையில், இது மேலும் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.