மும்பை: பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, 2023-ல் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரி 2’ என்ற வெப் சீரிஸில் தமன்னாவுடன் நடித்தார். பிறகு இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இவர்களது திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் வர்மா தனக்கு ஏற்பட்டுள்ள அரிதான தோல் நோய் குறித்து பேசியுள்ளார்.
சமீபத்தில், வெப் சீரிஸின் புரொமோஷனில் கலந்து கொண்ட அவர், விட்டிலிகோ எனப்படும் தோல் பிரச்சனை பற்றி பேசினார். இது ஒரு தொற்று நோய் அல்ல. இதன் காரணமாக, அவரது முகத்தில் வெள்ளை புள்ளிகள் தோன்றும், மேலும் அவர் அவற்றை மறைக்க ஒப்பனை மற்றும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் முதலில் பயந்ததாகவும் விஜய் வர்மா கூறியுள்ளார். தற்போது அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இருப்பினும், மேக்கப் இல்லாமல் எங்கும் செல்ல முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் இந்த நோய் குறித்து தமன்னாவிடம் கூறியுள்ளார். அவரது ஆலோசனைப்படி விஜய் வர்மா சிகிச்சை எடுத்து வருகிறார்.