சென்னை: ஹிந்திக்கு சென்ற தமன்னா, தான் நடிக்கும் படங்களின் பாடல்களில் அதிகபட்ச வசீகரம் காட்ட ஆரம்பித்துள்ளார். சமீபத்தில், ‘ஸ்த்ரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ பாடலுக்கு மயக்கும் வகையில் நடனமாடி ரசிகர்களை அசர வைத்தார். அந்த நடனத்திற்காக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமன்னா இதுபற்றி வாய் திறக்கவில்லை. பொதுவாக நடிகைகள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை பிராண்டாக பயன்படுத்துவார்கள். இந்நிலையில் தமன்னா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் பயன்படுத்தும் கைப்பை பிராண்டட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இதன் விலை மட்டும் சுமார் மூன்று லட்சம் ரூபாய். இதுகுறித்து கேட்ட ரசிகர்கள், ஒரு கைப்பை மூன்று லட்சமா? இதில் என்ன விசேஷம் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.