இன்று சல்மான் கான் தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் காலை 11:07 மணிக்கு வெளியிடுவதாக இருந்தது. தற்போது இந்த டீசர் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.

‘சிகந்தர்’ படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தை சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.