விஜய் தனது கடைசி திரைப்படமான தளபதி 69 யில் நடிக்கவுள்ளதாக உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில், தளபதி 69 இல் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் பரவலாக வெளியாகி உள்ளது. அனிமல் பட புகழ் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். அதன்பின், பூஜா ஹெக்டே நாயகியாகவும், நமிதா பைஜூ முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 ஆம் தேதி பூஜையுடன் துவங்க இருக்கிறது. அக்டோபர் 6 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் ஆரம்பத்தில் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் ஆரம்பிக்கப்படும், இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடுவார்கள். நடன அமைப்பாளர் சேகர் இப்படத்திற்காக கோரியோ செய்யவுள்ளார்.
தளபதி 69 திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது, குறிப்பாக தீபாவளி பண்டிகையுடன் தொடர்பான தேதி என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் முந்தைய படங்கள் பெரும்பாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளன, இதனால் தளபதி 69வும் அந்த வழியில் வெளிவரும் என எதிர்கொள்ளப்படுகின்றது.
விஜய் அரசியலில் களமிறங்குவதற்கு முன்பு நடிக்கும் படம் என்பதால், தளபதி 69 முழுக்க முழுக்க அரசியல் கதை கொண்டதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எச்.வினோத் ஒரு நிகழ்வில், இந்த படம் கமர்ஷியல் அடிப்படையிலானது என்றும், யாரையும் புண்படுத்தாமல் சில அரசியல் கருத்துக்களை கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். இப்படத்தின் போஸ்டரை பார்த்தபோது, அது புரட்சிகரமானதாய் தோன்றுகிறது.