கிருஷ்ணா கழுகு, யாக்கை, பண்டிகை, விழித்திரு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவரது 25-வது படம் ஒரு புலனாய்வு திரில்லர். ‘கேகே 25’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, மனுமந்திரா கிரியேஷன்ஸ் சார்பில் மகேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பாலகிருஷ்ணன். ‘ரெபெல்’ படத்தை இயக்குகிறார். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.