லாஸ் ஏஞ்சல்ஸ்: அனோரா திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற மைக்கி மேடிஸன், ’விருது வென்றது கனவுபோல் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
திரைக்கலைஞர்களின் பெருங்கனவான ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஷான் பேக்கர் இயக்கிய ’அனோரா’ திரைப்படம், 5 பிரிவுகளில் விருதுகளைக் குவித்து கவனம் பெற்றது.
சிறந்த நடிகையாக, ’அனோரா’ படத்தின் நாயகி மைக்கி மேடிசனுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில், ‘அனோரா’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற மைக்கி மேடிஸன், ’விருது வென்றது கனவுபோல் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ”ஆஸ்கர் விருது விழா கனவுபோன்ற இரவாக இருந்தது. நான் இன்னும் கனவு நிலையில் மிதந்து கொண்டிருக்கிறேன். விருது வென்றதை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்” என்று பேட்டியில் கூறியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்த அனைவரது நடிப்பையும் மிகவும் ரசித்ததாக மேடிசன் கூறியுள்ளார்.