மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘த பேட்மேன்’. ராபர்ட் பேட்டின்சன், ஜூயி கிராவிட்ஸ், பால் டனோ, ஜெப்ரி ரைட் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ளார். தொடர் கொலையாளி காவல்துறைக்கும் பேட்மேனுக்கும் கடும் சவாலாக உள்ளது.
பேட்மேன் தனது சாகச மற்றும் துப்பறியும் திறமையால் குற்றவாளியைப் பிடிப்பது பற்றிய படம். உலக அளவில் வரவேற்பு பெற்றதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், ராபர்ட் பாட்டின்சன் பேட்மேனாக நடிக்கிறார். 2023-ல் ஹாலிவுட்டில் ஏற்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இப்போது மீண்டும் ஒருமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 2027 அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாகிறது.