நரேன் கார்த்திகேயன் ஒரு இந்திய ஃபார்முலா 1 பந்தய ஓட்டுநர். F1 கார் பந்தயத்தில் புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் பல்வேறு கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாற்றை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். இதற்கான கதையை ‘சூரரைப் போற்று’ படத்தின் கதையில் பங்கேற்ற ஷாலினி உஷா தேவி எழுதியுள்ளார். இந்தப் படத்தை ப்ளூ மார்பிள் பிலிம்ஸ் தயாரிக்கும். இந்தப் படத்தில் நரேன் கார்த்திகேயனாக யார் நடிப்பார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தப் படத்தில், கோயம்புத்தூரில் பிறந்த ஒரு சிறுவன் F1 பந்தயத்திற்கு எப்படிச் சென்றான் என்பதைக் கூற முடிவு செய்துள்ளனர். நரேன் கார்த்திகேயன் தனது தந்தையுடன் பயிற்சி பெற்றது, 15 வயதில் போட்டிகளில் பங்கேற்றது, பிரான்சில் பயிற்சி பெற்றது, அங்கு அவர் எதிர்கொண்ட இனவெறி, வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் அவர் பெற்ற வெற்றி போன்றவை இடம்பெறும். மோட்டார்ஸ்போர்ட்ஸ் மீதான தனது காதல் இந்தப் பயணத்தில் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பது குறித்தும் அவர் பேசுவார்.
இந்தப் படத்தைப் பற்றி நரேன் கார்த்திகேயன் கூறுகையில், “மோட்டார்ஸ்போர்ட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இப்போது இந்தப் படம் அந்தக் கதையை உலகிற்குக் கொடுக்கிறது.” தற்போது, படத்தில் நடிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தேர்வு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.