தமிழ் சினிமாவில் கிளாமர் பாடல்கள் பாடல் வரிகள், இசை மற்றும் நடன வடிவமைப்புகளால் பிரபலமாகின்றன. அப்படிப்பட்ட பாடல்களில் சில வாழ்க்கையின் எதார்த்தங்களையும் நகைச்சுவையையும் கலந்து மக்களின் மனதில் நிற்கின்றன. அதுபோன்ற பாடலாக காதல் கவிதை படத்தில் இடம் பெற்ற “ஆளான நாள் முதலா” பாடல் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அகத்தியன் பாடல் வரிகளை எழுதியிருந்தார். பாடலுக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைத்து, நடிகை ரோஜா பாடலுக்கு கிளாமராக ஆடியிருந்தார். பாடலின் வரிகள் கணவன் மனைவிக்கிடையேயான உரையாடலாக அமைந்துள்ளதால், அது ஒரு காதல் பாடலாக மட்டுமல்லாமல் வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது.
ஆடி மாதத்தில் கணவன் மனைவி ஒன்றாக இருந்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கை முதல் சரணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் மூத்தோர் கூறும் பழமொழிகளை நினைவூட்டுகிறது. அடுத்த சரணங்களில் திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், பொருந்தாத உறவுகள் மற்றும் அதனால் வரும் சிரமங்கள் குறித்து நகைச்சுவையோடு சொல்லப்பட்டுள்ளது. “கல்லைக் கட்டி தண்ணிக்குள் மூழ்குறவன் போல வாழ்க்கை போகும்” என்ற வரிகள் பலரின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன.
மேலும் “காளை பால் கறக்காது” என்பதை எடுத்துக்கொண்டு, வேண்டுதல்களின் அபத்தத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார் பாடலாசிரியர். இந்தப் பாடலை புஷ்வனம் குப்புசாமியும் சௌமியாவும் பாடி ரசிகர்களிடம் கொண்டாடப்பட்டார். நகைச்சுவை, நையாண்டி மற்றும் வாழ்க்கை நுட்பங்களை கலந்த இந்தப் பாடல், ரோஜா நடித்த கிளாமர் பாட்டாக மட்டுமின்றி, மக்கள் நினைவில் நிலைக்கும் வாழ்க்கைத் தத்துவமாகவும் அமைந்துள்ளது.