அமரன் படத்தில் ராணுவ வீரர்கள் பஜ்ரங் பலி கி ஜெய் என்று கோஷமிட்டது சர்ச்சையாகி வரும் நிலையில், இது ராஜ்கோட் படைப்பிரிவின் சிறப்பு முழக்கம் என்றும் மாற்ற முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார்
பெரியசாமி. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அமரன். இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இது குறித்து படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடனும், பாராட்டுதலுடனும் வெளியான படம் இது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சொல்லும் தகவல்கள் சரியா என சோதித்து பேச வேண்டும் என்றார். மேலும், “ஒவ்வொரு ராணுவப் படைப்பிரிவுக்கும் ‘துர்கா மாதா கி ஜெய்’, ‘ஜெய் பஜ்ரங் பாலி’ போன்ற சொந்த முழக்கம் உள்ளது. ராஜ்புத் 44RR ராணுவப் படைப்பிரிவின் முழக்கம் ‘ஜெய் பஜ்ரங் பாலி’. என்னால் அதை மாற்ற முடியாது. அதை மாற்றுவது தவறாகும்,” என்றார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், “எனக்கும் பல அரசியல் பார்வைகள் உண்டு. ஆனால் எனது அரசியல் பார்வையையும், எனது சொந்தக் கருத்தையும் இந்தப் படத்தில் திணிக்க முடியாது. ஒரு இயக்குனராக என்னுடைய கருத்துக்கள் இந்தப் படத்தில் வரக்கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன். எனக்கும் சமூக பொறுப்பு உள்ளது,” என்றார்.