சென்னை: வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை‘ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் அடுத்த பாகத்தின் வேலைகள் நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். 2-ம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பின்னணியை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என்பதால், அதற்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க வேகம் காட்டி வருகின்றனர். அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்போது படத்தின் நீளம் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக இருப்பதாக தகவல். 2:30 மணி நேரம் ஓடும் படத்தை திரையரங்குகளில் வெளியிடவும், முழு படத்தையும் ஓடிடி-ல் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் ரயில் தடம் புரண்டதைக் காட்டிய அதே இடத்தில் இரண்டாம் பாகத்துக்கான கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட செலவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளதால், அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.