ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 151 கோடி வசூலித்து சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான இந்த படம், நான்கு நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு வாரத்தில் சுமார் 430 கோடி வசூலித்திருந்த கூலி, தற்போது வசூலில் மெல்ல மெல்ல குறைவடைந்துள்ளது. ஏழாம் நாளில் 8 கோடி வரை வசூலித்த நிலையில், எட்டாம் நாளில் இந்திய அளவில் 6 கோடி மட்டுமே வசூலித்தது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 225 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், உலகளவில் சுமார் 440 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நான்கு நாட்களில் சாதனையாக உயர்ந்த வசூல் இருந்தாலும், அதன் பின்னர் படம் மெதுவாகக் குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் கிடைத்துள்ள A சான்றிதழ் தான் என கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு படம் திரையரங்கில் பார்க்க அனுமதி இல்லாததால், குடும்பங்கள் கூட திரையரங்கில் வர தயங்குகின்றனர்.
இதனைக் கவனித்த படக்குழு, U/A சான்றிதழ் பெற முயற்சி செய்து வருகிறது. அந்த சான்றிதழ் கிடைத்தால், குழந்தைகளும் குடும்பங்களும் திரையரங்கில் படம் பார்க்கலாம் என்பதால் வசூல் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சனங்களில் கலவையான கருத்துகள் வந்தாலும், படம் 450 கோடி வரை வசூல் செய்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
முதலில் கூலி ஆயிரம் கோடி வசூல் செய்யும் என ரசிகர்களும் வட்டாரங்களும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அந்த இலக்கு சாத்தியமில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு படம் லாபகரமாகவும், ரஜினிகாந்துக்கு மேலும் ஒரு வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 300 கோடி வசூலை எட்டும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. வசூல் குறைந்தாலும், சூப்பர்ஸ்டாரின் மாயாஜாலம் இன்னும் பாக்ஸ் ஆபீஸில் தொடர்கிறது.