நடிகை அதிதிபாலன், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம், மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் அதிதி பாலன் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
“அருவி என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டது” என கூறும் அதிதி, குறிப்பாக அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு எயிட்ஸ் நோய் வந்ததாகவும், உடல் மெலிந்து, முடியை வெட்டிக் கொண்ட காட்சிகள் உள்ளன. அந்தக் காட்சிகள், ஒரு குடிசை வீட்டில் எடுக்கப்பட்டது. காட்சியின்போது, கேமராமேன் வெளியே சென்றதும், அந்தக் காட்சி ஒரே டேக்கில் எடுத்ததாக அவர் கூறினார்.
அதிதி, “இந்தக் காட்சிக்காக நான் உடல் இளைத்தேன், முடியை வெட்டிக்கொண்டேன். பெண்களுக்கு முடி அழகின் பிரதானமாக கருதப்படுகிறது, அதனால் முடியை வெட்டும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது” என உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.
இந்தக் காட்சி பிறகு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது திறமையை பாராட்டியதையும் அதிதி குறிப்பிடுகிறார். “அவர் என்னிடம் கேட்டார், ‘நீங்கள் ஃபிலிம் இன்ஸிடியூட்டில் படித்து வருகிறீர்களா?’ என கேள்வி எழுப்பினார்.
நான் இல்லை என்றேன். அவர், ‘இப்படி நடிக்கிறீர்கள் என்றால் நாங்கள் எங்கே செல்வது?’ என்றார். அவருடைய பாராட்டு எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.