ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் “கராத்தே பாபு” படத்தை இயக்குனர் கணேஷ் பாபு இயக்கி வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியானது.

டீசரில் ரவி மோகன் எம்எல்ஏ, நாசர் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என பல கேரக்டர்களில் நடித்து, கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த டீசர் நல்ல வரவேற்பு பெற்றதோடு, அதை பற்றி பலர் பேச ஆரம்பித்தனர்.
இந்த டீசர் வெளியானவுடன், தமிழக அரசு அமைச்சர் சேகர்பாபு இயக்குனர் கணேஷ் பாபுவிடம் தொலைபேசியில் பேசினார். அவர், “ரவி மோகன் கேரக்டர் எனக்கு என் கதை போல் தெரிகிறது” என்று கூறிய போது, இயக்குனர் பதிலளித்து, “இல்லை, இது கராத்தே பாபுவின் கதை,” என்று சொன்னார். அதற்கு அமைச்சர் சேகர்பாபு, “அந்த கராத்தே பாபுவே நான்தான்,” என்று கிண்டலாக கூறினாராம்.
இந்த பேச்சுவார்த்தையை ரவி மோகன் சினிமா நிகழ்ச்சியில் பகிர்ந்தபோது, அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டிருந்தார்.