சென்னை: ‘லெஜண்ட்’ சரவணனின் புதிய படத்தில் ஷாம், ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.
‘எதிர் நீச்சல்’, ‘கொடி’, ‘காக்கிச் சட்டை’, ‘கருடன்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் துரை செந்தில்குமார், இப்போது ‘லெஜண்ட்’ சரவணனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை ‘தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள பகுதிகளில் தொடங்கியுள்ளது.
இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ‘லெஜண்ட்’ சரவணனுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார்.
நடிகர்கள் ஷாம் மற்றும் ஆண்ட்ரியா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.