சென்னை: நடிகர் முகேன் ராவ் நடித்துள்ள ஜின் – தி பெட் என்ற திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ்.இவர் பாடிய இண்டிபெண்டண்ட் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் வேலன் , மதில் மேல் காதல் போன்ற படங்களிலும். மை 3 என்ற இணையதொடரில் நடித்தார். இதைத் தொடர்ந்து தற்பொழுது ஜின் – தி பெட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜின் படத்தை டி.ஆர் பாலா இயக்கியுள்ளார்.
முகேன் கதாநாயகனாக நடிக்க இவருடன் பாலசரவணன், பவ்யா திரிகா, ராதாரவி, வடிவுகரசி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகிறது.
வாழ்க்கையில் நினைத்தது எதுவும் நடக்காத கதாநாயகனுக்கு அதிர்ஷ்டத்தை தரும் ஜின் பெட்டி ஒருவர் கொடுக்கிறார். அதன் பிறகு அழகான வாழ்க்கை அமைகிறது ஆனால் அதே ஜின் பெட்டியால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார் இதற்கு அடுத்து என்ன ஆனது . இதுவே படத்தின் கதைக்களமாகும். படத்தின் இசையை விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜின்னை வளர்க்க மூன்று கண்டிஷன்கள் இருக்கிறது என கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.