இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 25-வது படத்திற்கு ‘சக்தி திருமகன்’ என்று படக்குழு பெயரிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி ஒரு சில படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். 2012-ல் கதாநாயகனாக நடித்து வரும் இவர் ‘நான்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’, ‘கோடியில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ‘ஹிட்லர்’ தான் அவர் நடித்த கடைசி படம். இந்நிலையில் தனது 25-வது படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். இந்தப் படத்தை அருண் பிரபு இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு இன்று வெளியிட்டுள்ள டைட்டில் போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.
“புயலின் வேகத்தில் புழுதியும் குப்பையும் இருக்குமா? மக்கள் கூட்டத்தின் வேகத்தை இந்த மனிதனால் தாங்க முடியுமா?” இதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் படம் ஆக்ஷன் ஜானர் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.