‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அப்போது கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். கார்த்தி ஓய்வு எடுத்து வருவதால் படத்தின் டப்பிங் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் கார்த்தியின் காட்சிகளுடன் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
கார்த்தியின் கால் நலம் அடைந்தவுடன் மீண்டும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். சில காட்சிகள் சென்னை, மைசூர் மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்படும். மொத்த படப்பிடிப்பும் முடிவடையும். ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்த கார்த்தி, தமிழ் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ படத்தை மித்ரன் இயக்குகிறார். கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ராஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், யுவன் இசையமைக்கிறார்.